காரைக்குடி, ஆக. 5: காரைக்குடி கோவிலூர் ரோடு செகன்ட்பீட் பகுதியில் டைம்ஸ் ஹெல்த் கேர் பவுண்டேசன் சார்பில் குளோபல் மிஷன் மருத்துவமனை திறப்புவிழா நடந்தது. மருத்துவமனை சேர்மன் டாக்டர் குமரேசன், டாக்டர் செந்தில்குமார் வரவேற்றனர். கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மருத்துவமனையை திறந்து வைத்தார். முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் தலைமை வகித்தார். எம்எல்ஏ மாங்குடி, நகராட்சி சேர்மன் முத்துத்துரை, துணைத்தலைவர் குணசேகரன், தொழிலதிபர்கள் படிக்காசு, செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பத்தூர் டிஎஸ்பி ஆத்மநாதன், வட்டாசியர் மாணிக்கவாசகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் ஆனந்த், சின்னத்துரை, நெடுஞ்செழியன், குன்றக்குடி சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கே.எஸ்.ரவி, அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன், ஓய்வு பெற்ற ஆணையர் கேசவன், இளைஞரணி துணை அமைப்பாளர் பரணிகிட்டு, தாய்சிதம்பரம், ருக்மா சரவணன். தொழிலதிபர் பிரிட்டிஷ் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.