காரைக்குடி, ஜூன் 5: காரைக்குடி அருகே பள்ளத்தூரில் பேரூர் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் 102வது பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாப்பட்டது. மாநில தலைமைபொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி தலைமை வகித்தார். பேரூர் கழக செயலாளர் அசோக் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் மணச்சைபாண்டி, ஒன்றிய துணைச்செயலாளர் வெள்ளையம்மாள், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய மகளிர் தொண்டரணி செயலாளர் சரோஜா நாராயணன், தகவல் தொழில்நுட்ப அணி கர்ணன், ஒன்றிய இலக்கிய அணி பள்ளத்தூர் கண்ணன், செந்தில், அப்பாதுரை, சசி, ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் சோலைமுருகன், இளைஞரணி சைலன், பேராசிரியர்பார்த்தசாரதி, பெரியசாமி, ஒன்றிய பிரதிநிதி கலைமணி, பரணி, பாலு, சேகர், நெற்புகபட்டி செயலாளர் பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
காரைக்குடியில் கலைஞர் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்
0