காரைக்கால், ஜூன் 6: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் தேர் திருவிழா இன்று நடைபெறுவதால் காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவிழாவையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூன் 21ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை துணை நிலை ஆளுநர் ஒப்புதல் பெற்று அரசின் சார்பு செயலர் ஹிரன் வெளியிட்டுள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் இன்று அரசு விடுமுறை
0