காரைக்கால்,ஆக.19: காரைக்கால் கடற்கரையில் சுதந்திரதினத்தை முன்னிட்டு கலை விழா நடந்தது. புதுவை அரசு கலை பண்பாட்டு துறையும் தென்னகப் பண்பாட்டு மையமும் இணைந்து இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு காரைகள் கடற்கரையில் இரண்டு நாள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் நிறைவு நாளாக கடற்கரை சாலையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் வெளி மாநில ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில கலைஞர்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்கள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் மணிகண்டன் கலந்து கொண்டு கலைஞர்களை ஊக்குவித்து பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், உதவி நூலக அதிகாரி திருமேணி செல்வம் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.