காரைக்கால்,செப்.4: ‘‘காரைக்கால் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உடனடி சேர்க்கை நடைபெறுகிறது,’’ என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடியில் உள்ள புதுவை அரசு கல்வி நிறுவனமான காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பிரான்சிஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் 2023-24ம் கல்வியாண்டுக்கான டிப்ளமோ முதலாம் ஆண்டு (எஸ்எஸ்எல்சி முடித்தவர்கள்) மற்றும் இரண்டாம் ஆண்டு (பிளஸ் 2 மற்றும் ஐடிஐ முடித்தவர்கள்) உடனடி சேர்க்கை நடைபெறுகிறது. கல்லூரியில் சேர விரும்பும் புதுவை மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 ஆகியவற்றுடன் வர வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04368-265521, 266521 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள வேண்டும். மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.