காரைக்கால்,ஆக.7:காரைக்காலில் நடந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. காரைக்கால் கையில் இந்தியா நிறுவனத்தின் சார்பில் காரைக்காலில் உள்ள அன்னை தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மத்திய அரசின் சுவிட்ச் பக்வாடா குறித்து ஓவியப்போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கெயில் நிறுவனத்தில் காவிரிப் படுகை பிரிவின் பொது மேலாளர் மற்றும் பொறுப்பாளர் செல்வராஜ் தலைமை வைத்து ஓவியப்போட்டியை தொடங்கி வைத்தார்.
போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை ஓவியங்களாக வெளிப்படுத்தினர். பின்னர் மாணவ மாணவிகளுக்கு கெயில் இந்திய நிறுவனத்தின் சார்பில் பள்ளிப் பை, பேனா, பென்சில் மற்றும் ஜியோமெட்ரி பாக்ஸ் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கெயில் இந்தியா நிறுவன மனிதவள அதிகாரி ரவி மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்