காரைக்கால்,ஆக.21: காரைக்காலில் சிறப்பு சுருக்கு முறை வாக்காளர் பட்டியல் திருத்த பணி குறித்து கலெக்டர் மணிகண்டன் ஆலோசனை நடத்தினார்.காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான மணிகண்டன் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் மணிகண்டன் பேசும்போது, நடைபெறவிருக்கிற சிறப்பு சுருக்கு முறை வாக்காளர் பட்டியல் திருத்தபணி – 1.1.2025 என்ற தேதியை தகுதி நாளாக கொண்டு 20.8.2024 முதல் 18.10.2024 வரை வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள், வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலுடன் வந்து தகுதியுடைய குடிமக்கள், வருங்கால வாக்காளர்கள், நிரந்தரமாக மாற்றப்பட்ட மற்றும் இறந்த வாக்காளர்களின் விவரங்களை சரிபார்ப்பார்கள் என்ற விவரத்தை தெரிவித்து அவர்களுடய ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் வாக்காளர் பதிவு அதிகாரிகளான ஜான்சன், சச்சிதானந்தம்,துணை மாவட்ட தேர்தல் அதிகாரியான செந்தில்நாதன் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.