காரைக்கால்,ஆக.31: காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு முதலுதவிப் பயிற்சி முகாம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி திருக்கடையூர் அடுத்து டி மணல்மேடு கிராமத்தில் வெல்ஸ்பன் பவுண்டேஷன் ஹெல்த் மற்றும் நாலேஜ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் திட்டத்தினை மதர் தெரசா எஜுகேசனல் டிரஸ்ட் செயல்படுத்தி வருகிறது.
இதன் சி.எஸ்.ஆர் திட்டத்தின் கீழ் காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு முதலுதவிப் பயிற்சி நிகழ்வு நடைபெற்றது. இதில் 110 மாணவிகள் கலந்து கொண்டனர். பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர்.கந்தவேல் அறிமுக உரை வழங்கி தொடங்கி வைத்து முதலுதவியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
முதலுதவிப் பயிற்சியாளர் பெஞ்சமின் அவர்கள் பேரிடர் விபத்து மற்றும் அவசர நிகழ்வுகளின் போது உயிர்களை எப்படி காப்பாற்றுவது குறித்து சிறப்பான பயிற்சியினை வழங்கினார். நிகழ்ச்சியில் மதர் தெரசா எஜுகேசனல் டிரஸ்ட் திட்ட இயக்குனர் இராமர்,கல்லூரி பேராசிரியர்கள் மதர் தெரசா எஜுகேசனல் டிரஸ்ட் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.