காரைக்கால்,ஆக.19: காரைக்காலில் இன்று பொதுமக்கள் குறைதீர் முகாம் நடக்கிறது.இது தொடர்பாக காரைக்கால் கலெக்டர் மணிகண்டன் ஆணைப்படி தாசில்தார் செல்லமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில் இம்முகாம் இன்று 19ம்தேதி முன்பு போல் மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும் என தெரிவித்து கொள்கிறோம். மேலும் இந்த குறைதீர்க்கும் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.