தர்மபுரி, மே 15: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் போலீஸ் எஸ்ஐ பசவராஜ் மற்றும் போலீசார், தொப்பூர் கணவாய் அருகேயுள்ள கட்டமேடு பகுதியில், நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், போலீசார் காரில் சோதனையிட்டனர். அதில் 24 மூட்டைகளில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பிலான 297 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. தொடர் விசாரணையில், அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த சூளகுண்டா கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன்(43), விருதுநகர் மாவட்டம் குவலபுரம் பகுதியை சேர்ந்த சக்திமுருகன்(33) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் 297 கிலோ குட்கா கடத்திய 2 பேர் கைது
0
previous post