கோவை, ஆக. 23: கோவை உப்பாரா தெருவை சேர்ந்தவர் விக்ரம் (32). பழைய கார் வியாபாரி. இவர் உக்கடம் என்.எச். ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜ் அருகே காரை நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்தார். அப்போது காரில் அவர் வைத்திருந்த மணிபர்சை காணவில்லை. அதில், ஒரு பவுன் தங்க நகை மற்றும் 60 கிராம் எடையிலான வெள்ளி நகை இருந்தது. விக்ரம், இதுகுறித்து உக்கடம் போலீசில், புகார் தந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில், பூட்டாமல் சென்ற கார் கதவை திறந்து சாரமேடு திப்பு நகரை சேர்ந்த கூலி தொழிலாளி முகமத் ஹஜாயாசீர் (31), மதுக்கரை அய்யப்பன் கோயில் தெருவை சேர்ந்த தொழிலாளி முகமது ஹரீஸ் (28) ஆகியோர் திருடியது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.