சூளகிரி, செப்.1: கர்நாடக மாநிலத்திலிருந்து பேரிகை வழியாக காரில் மதுபாட்டில் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர். சூளகிரி தாலுகா பேரிகை அருகே கர்நாடகா மாநில எல்லையில் உள்ள தின்னஹள்ளி பகுதியில் எஸ்ஐ சிவக்குமார், எஸ்எஸ்ஐ அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால், அந்த கார் நிற்காமல் சென்றதால், போலீசார் துரத்திச் சென்று தொட்டே கவுண்டனூரில் என்னுமிடத்தில் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து காரில் இருந்த திருப்பத்தூர் மாவட்டம் ஜலகண்டபாறை பகுதியைச் சேர்ந்த சுந்தரம் மகன் சந்திரன்(55) என்பவரிடம் விசாரித்தபோது, கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனே, அவரை கைது செய்த போலீசார், காருடன் ₹1.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
காரில் மதுபாட்டில் கடத்தியவர் கைது
previous post