திருச்சுழி, செப். 3: காரியாபட்டி அருகே மின்வயர்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.காரியாபட்டி அருகே முஷ்டக்குறிச்சியை சேர்ந்த சூரியன் (59). இவர் விவசாயம் செய்து வருகிறார். தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக தனக்கு சொந்தமான மோட்டாரை ஸ்சுவிட்சை போட்டு விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது மின்மோட்டார் ஓடவில்லை.
அப்போதுதான் மின் மோட்டாருக்கு சென்ற வயரையும், மோட்டாரில் இருந்து போர் வெல்லுக்கு சென்ற வயரையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சூரியன் ஆவியூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் ஆவியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.