காரியாபட்டி, ஜூன் 10: காரியாபட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
காரியாபட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் உதவி மின்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பாலசுப்பிரமணியத்திற்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லதா, செயற்பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.