காரிமங்கலம், மே 20: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் நேற்று வார சந்தை நடந்தது. சந்தைக்கு காரிமங்கலம், காவேரிப்பட்டணம், பாரூர், அரசம்பட்டி, பண்ணந்தூர், குடிமேன அள்ளி, தட்ர அள்ளி, செல்லம்பட்டி, அகரம், நாகரசம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று, சுமார் 1.50 லட்சம் அளவிலான தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் தேங்காய் அளவை பொறுத்து ரூ.10 முதல் ரூ.19 வரை விற்பனை நடந்தது.மொத்தம் ரூ.14 லட்சத்திற்கு தேங்காய் விற்பனையானது. கடந்த வாரத்தை போல் தேங்காய் வரத்து இருந்த நிலையில், விலை மற்றும் விற்பனை சரிந்தது. கோயில் விழாக்கள் இல்லாததால் தேங்காய் விலை குறைந்தது, என வியாபாரிகள் தெரிவித்தனர்.
காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.14 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை
0