காரிமங்கலம்: காரிமங்கலம் பேரூராட்சி 6வது வார்டில் ஒருங்கிணைந்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் மனோகரன் தலைமை வகித்து, துவக்கி வைத்தார். தூய்மை பணியாளர்கள் மற்றும் அரிமா சங்கத்தினர் இணைந்து குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தி, பொதுமக்கள் தங்களது வீட்டு குப்பைகளை பொது இடத்தில் போடாமல் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்து வழங்குவதுடன் தங்களது பகுதிகளை குப்பை இல்லாத பகுதிகளாக மாற்ற பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ஆயிஷா, துணை சேர்மன் சீனிவாசன், கவுன்சிலர்கள் சுரேந்திரன், நாகம்மாள், சதீஷ்குமார், பிரியா சக்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.