தர்மபுரி, செப். 1: காரிமங்கலம் அருகே உள்ள காமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகள் பிருந்தா (9). பெரும்பாலை சாமியார்கொட்டாய் பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 16ம்தேதி, பிருந்தா பாட்டியுடன் சொசைட்டிக்கு பால் ஊற்றுவதற்காக விவசாய தோட்டத்தின் வழியாக சென்றபோது, பிருந்தாயை பாம்பு கடித்துவிட்டது. வலியால் அலறிய சிறுமியை மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனை சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, பிருந்தா நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம் அருகே பாம்பு கடித்து சிறுமி சாவு
previous post