காரிமங்கலம்: காரிமங்கலம் ஒன்றிய பாமக பொதுக்குழு கூட்டம், ஒன்றிய செயலாளர் சஞ்சீவன் தலைமையில் நடந்தது. முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, சின்னசாமி, பிரஸ் ராஜா, முருகன், நந்தகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய தலைவர் பெரியண்ணன் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்வரன் எம்எல்ஏ, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீரை வழங்க வேண்டும், எண்ணேகொள் புதூர் தும்பல், அள்ளி கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும், கேஆர்பி அணை உபரி நீரை அனைத்து கிராமத்தில் உள்ள ஏரிகளுக்கும் கொண்டு செல்லக் கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட அமைப்பு செயலாளர் செல்வகுமார், செயலாளர் அன்பழகன், கொள்கை அணி விளக்க செயலாளர் சித்துராஜ், மோகன், நகர செயலாளர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விஜயா சங்கர் நன்றி கூறினார்.
காரிமங்கலத்தில் பாமக பொதுக்குழு கூட்டம்
previous post