எப்படிச் செய்வது?ஒரு பாத்திரத்தில் சர்க்கரை 50 கிராம் போட்டு அடுப்பில் சூடாக்கவும். சர்க்கரை கரைந்து பழுப்பு நிறமாகும்போது தண்ணீரை விட்டு 5; நிமிடம் வரை கொதிக்க விடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும்.கேக் செய்முறைமுட்டையின் வெள்ளையையும், மஞ்சள் கருவையும் தனித்தனியாகப் பிரிக்கவும். இரண்டையும் தனித்தனியாக நன்றாக பீட்; செய்துகொள்ளவும். சர்க்கரையும், வெண்ணெயும் லேசாக ஆகும் வரை நன்றாக பீட் செய்துகொள்ளவும். இத்துடன் மஞ்சள் கருவை சேர்த்து; பீட் செய்துகொள்ளவும். காரமல் சேர்த்து பிறகு சலித்த மாவை சேர்க்கவும். அதனுடன் அடித்த முட்டையின் வெள்ளைக்கருவை போட்டு; மெதுவாக; கலக்கவும். தேவையானால் பால் விடவும். 7 இஞ்ச் பேக்கிங் பேனில் வெண்ணெய் தடவி மாவு தூவி அதில் க.மாவு; கலவையை போடவும். பிறகு 300C- 40 நிமிடம் பேக் செய்யவும். பேக் ஆனவுடன் எடுத்து ஆற வைக்கவும். கேக்கின் மேல் 30 கிராம் ஜாம்; தடவி மற்றொரு கேக்கை அதன்மேல் வைத்து பரிமாறலாம்
காரமல் கேக்
previous post