பல்லடம், நவ.20: சேலம் திமுக இளைஞரணி மாநாட்டையொட்டி திமுக இளைஞரணியினர் பல்லடம் காரணம்பேட்டைக்கு இரு சக்கர வாகன பேரணியினர் வந்தனர். அவர்களை பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட திமுக துணை செயலாளர் வக்கீல் எஸ்.குமார், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ்,பொங்கலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பி.அசோகன், பல்லடம் கிழக்கு ஒன்றிய கழக துணை செயலாளர் இச்சிப்பட்டி சிவக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜசேகரன், வைஸ் பாலசுப்பிரமணியம், பல்லடம் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் ராஜேஸ்வரன், பல்லடம் கிழக்கு அமைப்பாளர் கதிரேசன், பொங்கலூர் மேற்கு அமைப்பாளர் லோகுபிரசாத், ஒன்றிய துணை அமைப்பாளர் கரடிவாவி தங்கராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.