நன்றி குங்குமம் தோழிநிகழ்ச்சித் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பெரிய திரையில் கதாநாயகியாக நடித்து, பின்னர் சின்னத்திரையில் பிசியாக இயங்கிக் கொண்டிருப்பவர் நடிகை ஸ்ரிதிகா. வெண்ணிலா கபடிக் குழு, மதுரை டூ தேனி, வேங்கை என சில படங்களில் நடித்திருக்கும் ஸ்ரிதிகா, நாதஸ்வரம் தொடரில், மலர் கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்களிடம் பிரபலமானவர். டிவி, சினிமா என இரண்டிலுமே வெற்றிகரமான பயணத்தை தொடங்கிப் பயணித்து வரும் ஸ்ரிதிகா, தற்போது ‘கல்யாணப் பரிசு’ தொடரில் நடித்து வரும் அனுபவத்தோடு, தான் கடந்து வந்த பாதையினை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.பிறந்து வளர்ந்தது எல்லாம் மலேசியாவில். டென்த் முடிச்சுட்டு அடுத்த ஸ்டடீஸ்காக சென்னை வந்தேன். என்னோட அக்கா ஒருத்தி டீவில ஏங்கரீங் பண்ணிட்டு இருந்தா. ஸ்கூல் லீவ்ல அவக்கூட சும்மா போவேன். அங்க என்ன பார்த்த புரொடீசர் ஒருவர் நீங்களும் ஏங்கரிங் டிரை பண்லாமே என்றார். ஏங்கரிங்கும் பண்ண ஆரம்பித்தேன், அதன் மூலம் விளம்பரங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது. அதைத் தொடர்ந்து படங்கள். இப்ப சீரியலில் பிசியா இருக்கேன்.நடிப்பின் மீது ஆர்வம்?எட்டு வயசு இருக்கும் போது மலேசியாவில் உள்ள டிவி சேனல் ஒன்றில் சீரியல் நடிக்க ஆரம்பிச்சேன். அதுதான் தற்போதும் தொடர்கிறது என்று நினைக்கிறேன். பெரிய திரை, சின்னத்திரை?இரண்டுக்குமே எனக்குப் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. பெரிய திரையில் வேலை நேரம் 9-6. சின்னத்திரையில் 9-9. அதே போல் ஒரு படம்ன்னா குறுகிய காலகட்டத்தில் முடிந்து விடும். சீரியல்ன்னு வரும் போது ஒரு நான்கு, ஐந்து வருடங்கள் போகும். சீரியலில் ஒரு குடும்பமாகவே ஆகிவிடுகிறோம். ரம்யா கிருஷ்ணன், அமலாவிடம் கற்றுக் கொண்டது?ரம்யா கிருஷ்ணன் மேம்கிட்ட சின்சி யாரிட்டி, ஃபிரண்ட்லி. இப்ப வரைக்கும் என்னை எங்குப் பார்த்தாலும் பேசிட்டுதான் போவாங்க. அந்த மாதிரி எப்போதும் நாம் யாரையும் மறக்கக்கூடாது என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். அமலா மேம்கிட்ட ஹூமன்பீயிங். இங்கு ஏதாவது வேலை பார்த்துகிட்டு இருக்காங்கன்னா, பக்கத்தில் ஏதாவது குப்பை இருந்தால் உடனே அதை எடுத்து குப்பைத்தொட்டியில் போடுவாங்க. யாரையுமே சீப்பா பார்க்க மாட்டாங்க. எல்லோரையுமே சமமா பார்ப்பாங்க. அதே மாதிரி விலங்குகளையும். எனக்குச் சின்ன வயதிலிருந்தே விலங்கு களை ரொம்ப பிடிக்கும். மலேசியாவில் ஆடு, மாடுகளை ஜூவில்தான் பார்த் திருக்கிறேன். இங்க ஸ்கூலுக்கு போகும் போது, போர வழியில் மாடெல்லாம் பார்த்தேன்னா உடனே கீழ இறங்கி, கொஞ்சிட்டுதான் போவேன். அமலா மேமை பார்த்ததுக்கப்பறோம் விலங்குகள் மீதான ஈர்ப்பு இன்னும் அதிகமாகிருச்சு.நடிப்பு துறையை தேர்வு செய்த பின், ஏண்டா நடிக்க வந்தோம் என்று நினைத்ததுண்டா?அப்படியெல்லாம் இல்லை. சந்தோஷமாக உணர்கிறேன். ஒவ்வொரு நாளும் என்ஜாய் பண்ணித்தான் வேலை செய்கிறேன். அதே போல் வேறெந்த துறைக்கு போகவேண்டுமென்று யோசனையும் வந்தது கிடையாது. மலர்?இன்னைக்கு வரைக்கும் மலர்ன்னுதான் போற பக்கமெல்லாம் சொல்லுவாங்க. என்னோட பெயர் மலராவே மாறியிருப்பது சந்தோஷம். மலர் போலவே சில பேர் அலமுன்னு கூப்பிடுவாங்க. வித்யா இன்னும் பிரபலமாகவில்லை. சீக்கிரமே அதுவும் நடக்கும் என்று நம்புகிறேன். திரைப்படங்கள் நடிக்க ஆசை உண்டா?ஆரம்பத்தில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தவள் தானே. ஹீரோயினாகவும், செகண்ட் ஹீரோ யினாகவும் நடித்திருக்கிறேன். இனி, வரும் காலங்கள் நல்ல கதாபாத்திரமும், ஸ்கிரிப்ட்டும் அமையும் போது எந்த கதாபாத்திரமும் நடிக்கத் தயார்.சீரியல் மீது வைக்கப்படும் குற்றச் சாட்டுகள்… எப்ப பார்த்தாலும் சண்டை, பழி வாங்குவது… இதை எப்படி பார்க்கிறீர்கள் ஒரு நடிகையாக?எனக்கும், நடிக்கும் போது என்ன ஒரே பிரச்சினையா இருக்குதுன்னுக் கூட நினைப்பதுண்டு. ஆனால், அது இல்லைன்னா பார்வையாளர்களுக்குப் பிடிக்க மாட்டேங்குது. ஏதாவது இப்படி காரசாரமா போகும் போதும், ஒரு பிரச்சினையை மையமாக வைத்து இருக்கும் போதுதான் மக்கள் அதை ரசிக்கிறார்கள். குறிப்பாகப் பெண்கள். என்னதான் கல்வியிலும், டெக்னாலஜியிலும் வளர்ந்திருந்தாலும், இது போன்ற பிரச்சினைகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இந்த மாதிரி பிரச்சினைகள் இருக்கிறது என்று சொல்வதோடு நின்று விடாமல் அதற்கான தீர்வுகளையும் ஓரளவு சொல்கிறோம் என்ற நிம்மதி இருக்கிறது.கல்யாணப் பரிசு வித்யா?ரொம்ப மென்மையான பொண்ணு வித்யா. எல்லா இடத்துலையும் அனுசரித்துச் செல்லக்கூடிய பெண். எல்லோருக்கும் பிடிக்கிறது மாதிரியான கேரக்டர். மலர் கதாபாத்திரம் போலத்தான். அவ கொஞ்சம் தைரியமா இருப்பா. ஆனால், இவ ரொம்ப சாஃப்ட். அடுத்தவர்களின் ஆசைகளைப் பார்ப்பதோடு, அவர்களின் விருப்பங்களையும் புரிந்து கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுப்பவளாக இருப்பாள். நீங்கள் பணிபுரிந்த இயக்குநர்கள் பற்றி ?சுசீந்திரன் சார், ரொம்ப ஜெனியூனான கேரக்டர். சாஃப்ட் நேச்சர். எதாவது ஒரு கரக்ஷன் சொல்றதா இருந்தாக்கூட, மெதுவா பக்கத்தில் வந்து மென்மையா தான் சொல்லுவாங்க. மதுரை டூ தேனி படத்தோட இயக்குநர் ரதிபாலா சார், ரொம்ப ஜாலியான கேரக்டர். என்னை ஒரு குழந்தை மாதிரிதான் அந்த டீமில் பார்த்துகிட்டாங்க. ஹரி சார்ன்னாவே ஃபாஸ்ட். ரொம்ப டெடிக்கேட்டட். ஜெனியூன். வேங்கை படம் நடிக்கறதுக்கு முன்னாடியே ஹரி சார் ரொம்ப பிடிக்கும். அவரை ஒரு முறை நேர்காணல் செய்திருக்கிறேன். அதில் அவர் சொன்ன விஷயமெல்லாம் கேட்டு ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டேன். அந்த நாளே அம்மாகிட்ட சொன்னேன், ‘நான் எதாவது படம் நடித்தேன்னா ஹரி சார் படத்தில் கண்டிப்பா பண்ணணும்ன்னு’ சொன்னேன். திருமுருகன் சார் பயங்கரமான ஹூமர் சென்ஸ் உள்ளவர். நாதஸ்வரம் ஸ்பாட்டில், காமெடி பண்ணி எல்லோரையும் கலாட்டா பண்ணுவார். எல்லோரும் நல்லா சாப்பிடணும்னு நினைப்பார். ‘குலதெய்வம்’ இயக்குநர் பழனி சார், ஒரு பிரதர் கூட வேலை பார்த்த மாதிரி அனுபவம். செல்வம் சார் – ‘கல்யாணப் பரிசு’ இப்ப போயிட்டு இருக்கு. செம்ம கலாட்டா, ஜாலியான ஒரு டீம். நடிப்புத் தவிர?பாடுவதும், பாடல் கேட்பதும் ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் கூட பாடல் கேட்காமல் இருக்க மாட்டேன். படங்களில் இன்னும் பாடியது கிடையாது. வாய்ப்புக் கிடைக்கும் போது அதை பயன்படுத்திக் கொள்வேன். நிறைய ஷோக்களில் பாடல் பாடியிருக்கிறேன். ஷ்ரேயா கோஷல் பாடல்கள் என்றால் உயிர். அதே போல் புத்தகங்களும் புரட்டுவேன். சிட்னிசெல்டன் நாவல்கள் அனைத்தும் படித்திருக்கிறேன். இதனோடு மோட்டிவேஷன் புத்தகங்களும் அதிகம் படிப்பேன். உங்களை பற்றி தெரியாத விஷயம்?நிறைய பேருக்கு நான் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பது தெரியாது. ‘யாரடி நீ மோகினி’ படத்தில் சரண்யா மோகனுக்கு நான் தான் டப்பிங். மேலும், ‘ஆறுமுகம், ஈரம், ஜெயம் கொண்டான்’ போன்ற படங்களின் நாயகிகளுக்கும் எனது குரல்தான். அதே போல் நான் நடிக்கும் எல்லாவற்றிற்கும் டப்பிங் நான்தான். மீடூ…?எல்லா இடங்களிலுமே பாலியல் சீண்டல்கள் இருக்கத்தான் செய்கிறது. சீரியல், மூவி அப்படின்னு இல்லை. இங்கு பிரபலம் என்பதால் உடனே அந்த விஷயம் வெளியில் வந்து விடுகிறது. எந்த ஒரு விஷயமாகட்டும் அது நம்ம கட்டுப்பாட்டில் இருக்கும் வரை எந்த பிரச்சினையும் இருக்காதுன்னு நினைக்கிறேன்.நடிக்க வரும் பெண்களுக்கு மலர் அட்வைஸ்…நடிப்பு அழகான தொழில். அதை பலர் மிஸ் யூஸ் செய்து தப்பா பண்றதால், அந்த தொழிலுக்கு ஒரு கெட்ட பெயர். நிறையப் பேர் நடிக்க வந்தால் ஃபேமஸ் ஆகிடலாம், பணம் நிறைய சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் குறியாக இருக்கிறார்களே தவிர நடிப்பில் ஆர்வமாக இருப்பதில்லை. நடிப்பு மீது மதிப்பு வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஐடியில் வேலை செய்யும் பெண்கள் சிலர் டிவிட் பண்ணிட்டு இதற்கு வருகிறார்கள். ஏன் என கேட்டால் ஃபேமஸ் ஆகிவிடலாம். இது நல்ல விஷம் தான், அதே நேரத்தில் இன்ட்ரஸ்ட் இருந்து, அதை ஒரு ப்ரொபசனலாக மதிக்க வேண்டும். பெண்களாக இருக்கும் போது கொஞ்சம் கவனமும் தேவைப்படுகிறது, மற்ற இடங்களை விட. பொதுவாக எல்லோருடைய பார்வையிலும், நடிப்புத் துறைக்கு வந்ததுக்கு பிறகுதான் ஸ்மோக்கிங், ட்ரிங்கிங் போன்ற விஷயங்களுக்குப் பெண்கள் தள்ளப்படுகிறார்கள் என்று. ஆனால், இது நாம் சேரும் ஆட்களை பொறுத்திருக்கிறது. இந்தத் துறையில் மட்டுமல்ல, எந்தத் துறையாக இருந்தாலும் இது பொருந்தும். நாம் எந்த அளவு நடந்து கொள்கிறோமோ அதைப் பொறுத்துத்தான் எல்லாம் இருக்கிறது.நேர்மறையா இருங்க…ஒரு விஷயத்தை எப்போதும் நான் டீப்பா எடுத்துக்கிறது கிடையாது. இப்படித்தான் இருக்கும், அப்படித்தான் இருக்கும்ன்னு நாம் யோசித்துக் கொண்டி ருந்தால் அதற்கு ஏற்ற மாதிரிதான் நம்ம லைஃப் போகும். அப்படி யோசித்தாலும் அது நல்ல விஷயமா இருக்கட்டும். அதை ஆழமாக யோசிங்க. எதன் மீது ரொம்ப ஆசைப்படுகிறோமோ அது கண்டிப்பா நடக்கும். எண்ணம் போலவே நம் வாழ்க்கை.சன் டிவி..?சன் டிவின்னாலே உலகம் முழுவதும் எல்லோருக்கும் தெரியும். சீரியலுக் கெல்லாம் இங்கு முன்னோடி சன் டிவி தான். அப்படிப்பட்ட ஒரு சேனலில் தொடர்ந்து ஒன்பது வருடம் சீரியலில் நடித்துக் கொண்டிருப்பது ரொம்ப பெருமையான விஷயம். சன் டிவிக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்வதோடு, கடமையும் பட்டிருக்கிறேன். இதை நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாகப் பார்க்கிறேன்.எதிர்கால திட்டம்?திருமணத்திற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல பையனா செட் ஆச்சுன்னா அடுத்து கல்யாணம்தான். – அன்னம் அரசு…
காரசாரம் இல்லைன்னா வாழ்க்கை சுவைக்காது… சீரியலும் அப்படித்தான்!
previous post