கடத்தூர்: தமிழக சுகாதாரத்துறை அறிவுரையின் பேரில், கடத்தூர் பேரூராட்சி 7வது வார்டு மாரியம்மன் கோயில் பகுதியில், கடத்தூர் மருத்துவ அலுவலர் தேவி தலைமையில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது. இதில் ஏரளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். அவர்களுக்கு இலவச மருந்து மாத்திரைகள், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மதியழகன், சுகாதார ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட மருத்துவ சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.