திருப்பூர், மே 15: திருப்பூர், பல்லடம் ரோடு, நொச்சிபாளையம் பிரிவை சேர்ந்தவர் குமரேசன் (54). இவர், தென்னம்பாளையம் சந்தையில் காய்கறி மண்டி வைத்துள்ளார். அவர் கடையில் பணியாற்றும் பானு (40) என்ற பெண்ணை குமரேசன் வீட்டு வேலைகளுக்காக அழைத்து வந்தார். இந்நிலையில் குமரேசனின் வீட்டை பானு தினமும் சுத்தம் செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பானு வீட்டு வேலைக்கு வருவதை நிறுத்திவிட்டார். பின்னர் குமரேசன் கேட்டுகொண்டதால் சில நாட்கள் பிறகு மீண்டும் வேலைக்கு வந்தார். இந்நிலையில் குமரேசனின் வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் பணம், 6 பவுன் தங்க ஆபரணங்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக குமரேசன் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார், வீட்டு பணிப் பெண்ணான பானுவிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் குமரேசன் வீட்டு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சம் பணம், 6 பவுன் நகைகளை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து பானுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காய்கறி மண்டி உரிமையாளர் வீட்டில் ரூ.1 லட்சம் பணம், 6 பவுன் திருடிய பணிப்பெண் கைது
0
previous post