Sunday, July 14, 2024
Home » காயா…பழமா…

காயா…பழமா…

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்‘இயற்கையின் அளவற்ற கருணையால் உடல்நலனைப் பாதுகாக்கும் வகையில் எண்ணற்ற காய்களும், பழங்களும் நமக்குக் கிடைக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டுமே ஒரே பயனைத் தரக் கூடியவை என்றாலும், ஒரே ஒரு உணவுப்பொருள் காயாக இருக்கும்போது ஒருவித பலனையும், பழமாக இருக்கும்போது வேறுவித பலனையும் தருவதில் சற்று மாறுபடுகிறது’ என்கிறார் உணவியல் நிபுணர் அபிராமி.காயா அல்லது பழமா… இது இரண்டில் எது சிறந்தது?‘‘ஒரு உணவுப்பொருளை காயாகப் பயன்படுத்தும்போது அதனுடைய சத்துக்கள், கலோரிகள் சற்று குறைவாக இருக்கும். அதுவே பழுத்த பிறகு இனிப்புச்சுவையும், கலோரிகளும், சத்துக்களும் சற்று கூடுதலாகிவிடும். அதனால் காயாக பயன்படுத்தும்போதைவிட, பழமாக பயன்படுத்தும்போது தேவையான அளவை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்… மாங்காய்பார்த்ததுமே வாயில் எச்சில் ஊற வைக்கும் ஒன்றுதான் மாங்காய். இதனுடன் மிளகாய்த்தூள், உப்புசேர்த்து சாப்பிடுவர் பலர். அதுபோல மாங்காய் கிடைத்தால் அதை அளவோடு சாப்பிடுவது நல்லது. மாம்பழத்தைவிட மாங்காய் கலோரிகள் மற்றும் இனிப்புச்சுவை மிகவும் குறைவு. அதனால் மாங்காய் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என பயப்படத் தேவையில்லை. எல்லா நாளும் அல்லாமல் வாரத்திற்கு 3-4 துண்டுகள் சாப்பிடலாம். மாங்காய் கர்ப்பிணிகளுக்கு நல்லது. கர்ப்பிணிகளுக்கு காலையில் மிகுந்த சோர்வு மற்றும் வாந்தி ஏற்படும். அப்போது மாங்காயை வாயில் போட்டுக் கொண்டால் அந்த பிரச்னைகளைத் தடுக்கலாம். பல ஆய்வுகளில் உடலில் ஏற்படும் அசிடிட்டியை குறைக்கும் எனக் கூறி உள்ளார்கள். மாங்காய் சாப்பிடுவதன் மூலம் பித்தநீர் சுரப்பு அதிகரிப்பதோடு குடலின் ஏதேனும் கெட்ட பாக்டீரியா தொற்றுகளை அழித்து குடலை சுத்தப்படுத்தும். இதனால் கல்லீரலுக்கும் நல்லது. மாங்காய் சாப்பிட்டால் நம் உடலின் Energy அதிகரிக்கும். எனவே, இதனை மதிய வேளையில் எடுப்பது நல்லது.மாம்பழம்கோடை காலத்தில் எத்தனையோ பழங்கள் பிரபலமாக இருந்தாலும் அதில் மாம்பழமே எல்லோரின் விருப்பத்துக்குரியதாகவும் இருக்கிறது. இதில் நார்ச்சத்து மற்றும் உடலுக்கு தேவையான பல வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இதில் சோடியம் மிகவும் குறைவு. சோடியம் கம்மியாகவும் Magnesium அதிகமாகவும் உள்ளதால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஏனெனில் இதில் அதிக அளவு பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து இருக்கிறது. எனவே, இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கட்டுப்படுத்தும். பீட்டா கரோட்டீன் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகளும் அதிகம் உள்ளது. எனவே, இது புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. இது செரிமானத்திற்கு நல்லது. இதில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் உள்ளதால் உடலையும் சருமத்தையும் இளமையாக வைத்து கொள்ள உதவுகிறது.வாழைக்காய்வாழைப்பழத்தின் பலன்களை நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால், பழுக்காத வாழைப்பழம் (வாழைக்காயின்) பலன்களை இப்போது பார்ப்போம். இதில் Starch மற்றும் Anti-oxidant அதிகம் உள்ளது.இது குடலை சுத்தப்படுத்தி, அதிலுள்ள கொழுப்புகளை குறைக்கிறது. மலச்சிக்கலிருந்து விடுபட உதவுகிறது ஏனெனில் இதிலிருக்கும் நார்ச்சத்து மலத்தை இலகுவாக்கி, எளிதில் வெளியேற்ற உதவுகிறது. வாழைக்காயில் Tryptophan என்ற Amino acid உள்ளது. இந்த அமிலம் மூளையில் நடக்கும் ரசாயனங்களை ஒழுங்குப்படுத்தும் அவ்வகையான வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உணர்ச்சிகரமான மனநிலை உண்டாவதைத் தடுத்து மன அமைதியைப் பெறலாம்.வாழைப்பழம்வாழைப்பழம் என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பிரியமாக உண்பார்கள். ஆனால், அதில் எவ்வளவு நன்மை உள்ளது தெரியுமா? வாழைப்பழத்தில் உள்ள Fructose, Glucose மற்றும் Sucrose உடலுக்கு ஆற்றலை உடனடியாகக் கொடுக்கும். அதனால்தான் விளையாட்டு வீரர்களை அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட சொல்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் இதை விளையாடும் 30 நிமிடத்துக்கு முன் எடுத்து கொள்வது நல்லது.மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை எடுத்துக் கொள்வது நல்லது. ஜீரண சக்திக்கு மிகவும் உதவும். மன அழுத்தத்தைப் போக்கி மனதை அமைதிப்படுத்தும். குடலில் ஏற்படும் அல்சர் பிரச்னைகளுக்கு நல்லது. ;வெள்ளரிக்காய்வெள்ளரியின் கொழுந்து, பிஞ்சு, காய், வேர் போன்ற அனைத்தும் மருந்தாய் பயன்படுகிறது. இது பலருக்கு தெரியாதவை. இதை காய் இதே குடும்பத்தில் இன்னொன்று உள்ள அதன் பெயர் சீமை சுரைக்காய்(Zucchini). இது காய்/ பழம் என்று கூறுகிறார்கள். வெள்ளரியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. அதனால் இதனை வெயில் காலத்தில் உண்பது நல்லது. இது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும். வயிற்றுப்புண் குறையும். இதில் Magnesium என்ற Nutrient நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தத்தை சீர்படுத்தும். பல் ஈறுகளைப் பாதுகாக்கும் திறன் கொண்டது. பல் துர்நாற்றத்தைப் போக்கும். மாதவிடாய்க் கோளாறுகள் போன்றவற்றையும் சரி செய்யும்.சீமை சுரைக்காய்Zucchini என்கிற சீமை சுரைக்காயை அன்றாடம் நம் உணவுடன் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இதை காய் என பல பேரும் / பழம் என பல பேரும் கூறுகிறார்கள். இதில் பல்வேறு பலன்கள் நிறைந்துள்ளன. உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. நீர்ச்சத்து 95% உள்ளது என்பதால் நம் உடலை Hydrated வைத்துக் கொள்ள உதவுகிறது. இதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண் பார்வைக்கு நல்லது. இதில் Collagen அதிகம் உள்ளதால் சருமத்திற்கு நல்லது. இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளதால் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. – க.இளஞ்சேரன்

You may also like

Leave a Comment

five − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi