ஆறுமுகநேரி, ஆக. 21: காயல்பட்டினம் முகைதீன் மெட்ரிக். பள்ளியில் கலை இலக்கிய விழா நடந்தது. தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பில் காயல்பட்டினம் முகைதீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை இலக்கிய விழா மற்றும் பல்வேறு போட்டிகள் நடந்தது. பள்ளி செயலாளர் முகம்மது சம்சுதீன் தலைமை வகித்தார். பள்ளி துணை தலைவர் செய்யது அப்துல் காதர், ரூக்னூதீன் சாகீபு முன்னிலை வகித்தனர். தூய யோவான் கல்லூரி பேராசிரியர் பெலிக்ஸ் பிரான்சிஸ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பள்ளி முதல்வர் ரத்தினசாமி வரவேற்றார். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் காஜாமுகைதீன், சுரோன்மணி, அறக்கட்டளை நிறுவனர் நெல்லை அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தமிழாசிரியர்கள் கோமதி, கிருபாகரன், மேனகா, ஜெபா, விழாகமிட்டியினர் பாத்திமா சமீஹா மற்றும் ரேவதி ஆகியோர் செய்திருந்தனர்.