ஆறுமுகநேரி, ஜூன் 19: காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவை சேர்ந்த போண்டா சதாம் என்ற சதாம் உசேன்(27). இவர், நண்பர்கள் காயல்பட்டினம் மங்கள விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த அபுபக்கர் சித்திக்(20), எல்.ஆர் நகர் செல்வகுமார் என்ற காக்கா செல்வம்(21), தனராஜ்(21), மேல நெசவு தெரு மன்சூர்(34) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு காயல்பட்டினம் அருகே உள்ள பூந்தோட்டம் பழைய இரும்பு கடைக்கு பின்புறம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் சதாம்உசேனை மற்ற 4 பேரும் கட்டை மற்றும் கைகளால் சரமாரியாக தாக்கினர். இதில் சதாம் உசேனின் மண்டை உடைந்து காது மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிந்து அபுபக்கர் சித்திக், செல்வக்குமார் என்ற காக்கா செல்வம், தனராஜ், மன்சூர் ஆகியோரை கைது செய்தனர்.
காயல்பட்டினத்தில் நண்பரை தாக்கிய 4 பேர் கைது
0
previous post