நிலக்கோட்டை, மார்ச் 12: திண்டுக்கல்லில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் 7 மாணவர்கள் காயமடைந்தனர். இவர்கள் திண்டுக்கல் ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விசிக முற்போக்கு மாணவரணி மாநில துணை செயலாளர் மணிகண்டன் தலைமையிலும், மாநகர் மாவட்ட செயலாளர் மைதீன் பாவா முன்னிலையிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்து பழங்கள் வழங்கினர். உடன் மண்டல துணை செயலாளர் அன்பரசு, மாநில துணை செயலாளர் திருச்சித்தன், மாமன்ற உறுப்பினர் நடராஜ், பொறுப்பாளர்கள் ரமேஷ், பால்ராஜ், நூர் ஆகியோர் இருந்தனர்.
காயமடைந்த மாணவர்களிடம் நலம் விசாரிப்பு
0
previous post