காரைக்கால், ஜூலை 22: கர்ம வீரகாமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு காரைக்காலில் உள்ள அன்னை தெரசா செவிலியர் கல்லூரி வளாகத்தில் பழம் தரும் மரக்கன்றுகளை புதுச்சேரி நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இணைந்து நட்டனர். மேலும் கர்மவீரர் காமராஜரைப் பற்றி சிறப்பான கட்டுரை எழுதிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதர் தெரசா நர்சிங் கல்லூரியின் ஆசிரியர் ஜெயபாரதி, புதுச்சேரி நுகர்வோர் கூட்டமைப்பின் மாநில தலைவர் வழக்கறிஞர் திருமுருகன், புதுச்சேரி நுகர்வோர் கூட்டமைப்பின் மாநில செயலாளர் சிவக்குமார் மற்றும் சமூக ஆர்வலர் சூர்யா ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.