நாமகிரிப்பேட்டை, ஆக.31: நாமகிரிப்பேட்டை முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) வணிக கல்வி மையம் மற்றும் சேலத்தை சேர்ந்த இந்திய காப்பீட்டு கல்வி நிறுவனம் இணைந்து, தேசிய அளவிலான கருத்தரங்கை நடத்தியது. இதில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன முன்னாள் செயல் இயக்குனர் வேணுகோபால், இந்திய காப்பீட்டு கல்வி நிறுவன மும்பை செயலாளர் மணிஸ் ரெய்கர், சேலம் மூத்த மண்டல மேலாளர் அனந்தகுமார், சேலம் காப்பீட்டு கல்வி நிறுவன கெளரவ செயலாளர் சேகர் நாராயணன், ஆட்சிக்குழு உறுப்பினர் பாபு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மேலும், இந்திய காப்பீட்டு துறையில் உள்ள வேலை வாய்ப்புகள், இந்தியாவின் வளர்ச்சியில் காப்பீட்டு துறையின் பங்கு, தனியார் காப்பீட்டு துறையின் மூலமாக, பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சந்திக்கும் சவால்கள், காப்பீட்டு துறையின் எதிர்காலம் மற்றும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இதில் ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவன செயலாளர் முத்துவேல் ராமசுவாமி கலந்து கொண்டு பேசினார்.
காப்பீடு குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கு
previous post