திருவொற்றியூர், ஆக.3: சென்னை பூங்கா நகர் நைனியப்பன் தெருவில் தனியார் சிறுவர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. தாய், தந்தை இல்லாத சிறுவர்கள் இங்கு தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று, 12 வயதுள்ள 2 சிறுவர்கள் காப்பகத்தில் இருந்து திடீரென மாயமாகினர். காப்பக நிர்வாகிகள் இதுகுறித்து பூக்கடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி ஆய்வாளர் புஷ்பராஜ் தலைமையிலான போலீசார் மாயமான சிறுவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், எண்ணூரில் உள்ள உறவினர் வீட்டில் ஒரு சிறுவனையும், ரயில்வே போலீசார் மற்றொரு சிறுவனையும் பிடித்து வைத்து இருப்பதும் தெரியவந்தது. மெரினா கடற்கரைக்கு செல்வதற்காக காப்பகத்தில் இருந்து தப்பியதும் தெரியவந்தது. அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இவர்கள் எப்படி தப்பினர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காப்பகத்தில் இருந்து தப்பிய 2 சிறார்கள் மீட்பு
previous post