சேலம், மே 26: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சேலம் காந்தி ஸ்டேடியத்தில் உள்ள நீச்சல் குளத்தில் 4ம் கட்ட கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் கடந்த 13ம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள் என 64 பேர் கலந்து கொண்டனர். பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு நேற்று சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், நீச்சல் பயிற்சியாளர் மகேந்திரன் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினர். தொடர்ந்து 5ம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் வரும் 27ம் தேதி தொடங்கி ஜூன் 8ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.