திருப்புத்தூர், ஜூலை 25: திருப்புத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் வீடு இல்லாத ஏழைகளுக்கு மனை இடம் வழங்க கோரி தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மோகன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தார். திருப்புத்தூர் அண்ணா சிலையில் இருந்து கண்டன முழக்கங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகம் வந்து வட்டாட்சியர் அந்தோணிதாஸை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். இதனையடுத்து வட்டாட்சியார் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து விவசாயிகள் சங்கத்தினர் அங்கிருந்து சென்றனர்.