அருப்புக்கோட்டை, ஆக.23: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பாலையம்பட்டியில் உள்ள காமராஜர் நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் அருண்ராஜ் (25). இவர், திருச்சுழியில் உள்ள தனியார் வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து வந்தார். இவர், தான் குடியிருக்கும் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண்ணும் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இளம்பெண் திடீரென அருண்ராஜூடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால், கடந்த சில நாட்களாக அருண்ராஜ் மனவேதனையில் இருந்துள்ளார்.
இதனிடையே, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருண்ராஜ் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அவரது தாத்தா முத்துமாரி கொடுத்த புகாரின் பேரில், அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.