செய்யாறு, ஜூன் 27: செய்யாறு அருகே காதல் திருமணம் செய்து கொண்ட அக்கா தற்கொலை செய்து கொண்டதால் ஆத்திரத்தில் இருந்த வாலிபர், அக்காவின் கணவரை சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த ஆராத்திரி வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி(58), கைத்தறி நெசவுத்தொழிலாளி. இவரது மகன் தணிகைவேல்(35). இவர் அதே கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை காதலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரு மாதத்தில் குடும்ப தகராறில் விஜயலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். அன்று முதல் விஜயலட்சுமியின் சகோதரர் ராஜா(34) என்பவர், ‘எனது சகோதரி சாவுக்கு நீதான் காரணம், நீதான் அவரை கொன்றுவிட்டாய்’ எனக்கூறி தணிகைவேலிடம் தகராறு செய்து வந்தாராம். இதனால் முன்விரோதம் இருந்து வந்தது.