வெள்ளக்கோவில், மே 28: வெள்ளக்கோவில் அருகே உள்ள புதுப்பை தங்கமேடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், தாய் தந்தையிடம் இருந்து கொண்டு வெள்ளகோவில் பகுதியில் உள்ள ஒரு பஞ்சு மில்லுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த சிறுவனுக்கும், வெள்ளகோவில் அருகே உள்ள கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பொண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு பழகி வந்ததாக தெரிகிறது. இதை சிறுவனின் பெற்றோர் கண்டித்ததால் தன்னைத்தானே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.இதையடுத்து சிறுவனை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.