கந்தர்வகோட்டை, பிப்.16: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம், காட்டுநாவல் ஊராட்சியில் தமிழக அரசின் ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்த நிலையில் அந்த அங்கன்வாடி கட்டிடம் சிதிலமடைந்து இடிந்து உள்ளதால், அந்த அங்கன்வாடியை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இந்த நிலையில் இந்த அங்கன்வாடியில் சுமார் 20 குழந்தைகள் பயின்று வருவதாக தெரிய வருகிறது, இந்த குழந்தைகளுக்கு தினசரி முட்டை உள்ளிட்ட உணவை மட்டும் வழங்கி வருகின்றனர்.
அவர்களுக்கான படிப்பு விளையாட்டு உபகரணம் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். எனவே அருகில் உள்ள பயன்படுத்தாத நிலையில் உள்ள நூலக கட்டிடத்தை தற்காலிக அங்கன்வாடி கட்டிடமாக நடத்திட சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காட்டுநாவல் கிராம பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர், மேலும் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தையும், சமையல் அறையும் விரைந்து கட்டிதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் .