காஞ்சிபுரம், மார்ச் 5: காஞ்சிபுரம் அருகே சிறுவாக்கம் ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்த சுமார் 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுவாக்கம் ஏரிக்கரை அருகே தினந்தோறும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பொன்னேரிக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், பொன்னேரிக்கரை போலீசார் சிறுவாக்கம் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
போலீசாரின் விசாரணையில் அவர் சிறுவாக்கம் பிராமணர் தெருவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் மணிகண்டன் (எ) ஜெமினி (27) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. உடனடியாக மணிகண்டனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த சுமார் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து மணிகண்டனை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
0