ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே சிறுமாங்காடு பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஸ்ரீபெரும்புதூர் நோக்கி பைக்கில் வந்தவரை மடக்கி பிடித்து விசாரித்ததில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால், சந்தேகமடைந்து பைக்கை சோதனையிட்டபோது, அதில் கஞ்சா இருந்ததால் பைக்கை ஓட்டி வந்தவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் எச்சூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (34) என்பதும், இவர், ஏற்கனவே திமுக பிரமுகர் ஆல்பர்ட் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.