காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டு லைன் மற்றும் காவல்துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதில், மாவட்ட பாதுகாப்பு அலுவலர் சக்திகாவ்யா தலைமை தாங்கினார். ஆள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் பிரபாவதி, சுப்ரமணியன் மற்றும் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் அவிநாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சியில் உலகளந்த பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குழந்தைகளுக்கு தேவையான அவசர உதவி எண்கள் அடங்கிய குழந்தைகள் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். …
காஞ்சிபுரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
previous post