செய்முறைசர்க்கரையில் பாதி அளவு தண்ணீர் சேர்த்து லேசாக கம்பிப் பதம் வரும் வரை; கொதிக்க விடவும். அதில் பொடித்த பாதாமை சேர்த்துக் கிளறவும். Liquid; Glucose உடன் சிறிதளவு தண்ணீரில் கரைத்து முந்திரி கலவையுடன் சேர்த்துக்; கிளறவும். சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்தவுடன் கீழே இறக்கி வைத்து, ஒரு; தாம்பாளத்தில் கொட்டி, பிசைந்து, ஆற விடவும். இவ்வாறு ரெடி செய்த முந்திரிக் கலவையை மூன்று பகுதிகளாய் பிரித்து ஒன்றை அப்படியே வைத்துக்கொண்டு மீதமுள்ள இரண்டு பகுதிகளில் ஒன்றில் பச்சை நிறமும் மற்றொன்றில் சிவப்பு நிறம் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இப்போது சிறுசிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும். பின் கிண்ண வடிவில் ஷேப் செய்துகொள்ளவும். சிவப்பு உருண்டையை வெள்ளை கலர் கப்பின் உள்ளே வைத்து மூடவும். பின் இதை எடுத்து பச்சை நிற முந்திரி கப்பினுள் மூடி விடவும். நன்றாகக் காய்ந்தபின், ஸ்லைஸ் செய்து பரிமாறவும்.