நாமக்கல், ஆக.14: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், காங்கிரஸ் சார்பில் ₹2 லட்சம் மதிப்பிலான முட்டைகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கேரள மாநிலம், வயநாட்டின் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நாமக்கல்லில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் ₹2 லட்சம் மதிப்பிலான ஏற்றுமதி தரம் வாய்ந்த முட்டைகள் வயநாட்டுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாக்டர் செந்தில் தலைமை வகித்தார். திமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி கொடியசைத்து முட்டை வாகனத்தை அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, திமுக நகர செயலாளர்கள் ராணா.ஆனந்த், சிவகுமார், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சித்திக், தொழிலதிபர் வெங்கடாசலம், கால்நடை விஞ்ஞானி டாக்டர் நெல்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் செந்தில் கூறுகையில், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் முட்டைகள் வயநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இம்முட்டைகள் வயநாடு எம்.எல்.ஏ சித்திக் மற்றும் ராகுல்காந்தி உதவியாளர் சரண் இருவரும் பெற்று, தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்க உள்ளனர்’
என்றார்.