மதுரை, ஆக. 15: சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஒன்றிய பாஜ அரசை கண்டித்து மதுரை காந்தி மியூசியத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள கக்கன் சிலை வரை டூவீலர் பேரணி மதுரை நகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதற்காக கட்சியினர் காந்தி மியூசியத்தில் தங்கள் வானகங்களுடன் திரண்டனர். இதற்கிடையே அவர்களின் பேரணிக்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துவிட்டது. இதையடுத்து டூவீலர் பேரணியை கைவிட்ட காங்கிரசார், அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு புறப்பட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள். முருகன், போஸ், முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செய்யதுபாபு, துரையரசன், மாவட்டத் துணைத் தலைவர்கள் பாலு, மலர் பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் சிலுவை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் நடத்தவிருந்த டூவீலர் பேரணிக்கு அனுமதி மறுப்பு
previous post