ஊட்டி, பிப். 18: நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கிராம கமிட்டி அமைக்கும் பணி நஞ்சநாடு கிராமத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், மற்றும் முன்னாள் மாவட்ட தலைவருமான சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் ஊட்டி வட்டார தலைவர் நஞ்சநாடு வாசுதேவன் தலைமையில் கிராம கமிட்டி அமைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாநில இலக்கிய அணி துணைத்தலைவர் புருசோத்தமன், முன்னாள் குன்னூர் வட்டார தலைவர் எல்லநள்ளி மூர்த்தி, குன்னூர் நகர துணைத் தலைவர் நாராயணன், காட்டேரி விஸ்வநாதன், குருத்துக்குளி ஈஸ்வரன், அதிகரட்டி பிரதீப்குமார் மற்றும் கிராம பெண்கள் உட்பட நஞ்சநாடு கிராம கமிட்டி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.