ஈரோடு, நவ. 1: ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர் ஈ.பி.ரவி கலந்துகொண்டு இந்திரா காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தார். மேலும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர் மகேஸ்வரி புனிதன் முன்னாள் கவுன்சிலர் புனிதன், நிர்வாகிகள் விஜய்கண்ணா, பாஷா உள்பட கலந்துகொண்டனர்.