காங்கயம், ஆக.23: காங்கயம் புதிய டிஎஸ்பியாக மாயவன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். காங்கயம் டிஎஸ்பி யாக இருந்த பார்த்திபன், பணி மாறுதல் செய்யப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சப் டிவிசனுக்கு சென்றதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை குண்டம் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த மாயவன் பணிமாறுதல் பெற்று நேற்று காங்கயம் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
28 வயதான மாயவன் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று பதவிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பிக்கு காங்கயம் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அரியலூர் மாவட்டத்தில் ஏழ்மையான குடும்ப பின்னணியில் தேர்வான மாயவன் தனது பணி காலத்தில் இடை நின்ற பள்ளி மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து அரசால் பாராட்டு பெற்றவர்.