காங்கயம், ஜூன்27: காங்கயம் நீதி மன்ற வளாகத்தில் உள்ள வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. காங்கயம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காங்கயம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை காங்கேயம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான சந்தானகி ருஷ்ணசாமி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு சின்னத்தை நீதிபதிகள் வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் காங்கயம் உரிமையியல் நீதிபதி மாலதி,குற்றவியல் நீதித்துறை நடுவர் தேன்மொழி முன்னிலை வகித்தனர். அரசு வழக்கறிஞர் முருகேசன் உள்பட வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.