காங்கயம்,ஆக.24: காங்கயம் ஒன்றியம் சிவன்மலை ஊராட்சிக்குட்பட்ட சமம்புவாய் கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் மின் மோட்டர், தனியார் கம்பெனிகள் செயல்பட்டு வருகிறது. இதனை சுற்றியுள்ள வட்டார பகுதிகளில் குறைந்த அழுத்த மின்வினியோகம் காரணமாக மின் சாதனங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டது. மேலும் மாணவர்கள் இரவு நேரங்களில் படிக்க முடியாமலும், விவசாயிகள் மற்றும் தனியார் தொழில் நிறுவத்தினருக்கு சிரமம் ஏற்பட்டது.
இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டுமென காங்கயம் மின்வாரியத்திற்கு கடந்த 5 நாட்களுக்கு முன் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து கிராமத்தில் மின் வாரியத்தின் சார்பில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று 5 நாட்களில் புதிய மின்மாற்றி அமைத்த மின் வாரியத்திற்கும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.