காங்கயம், ஆக.28: காங்கயம்-சென்னிமலை சாலையில் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இருவழிச் சாலையை 4 வழிச் சாலையாக விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. திட்டுபாறை முதல் ஆலாம்பாடி வரை 6 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ. 37 கோடியில் தற்போது சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியினை திருப்பூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ரத்தினசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது இப்பணியினை தரமாகவும், விரைந்து முடிக்க வேண்டும் எனவும் ஒப்பந்தாருக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது காங்கயம் உதவி கோட்டப் பொறியாளர் தங்கவேல் மற்றும் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.