காங்கயம், ஜூலை 22: காங்கயத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவுப்பொருள் வணிகம் செய்வோருக்கு உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.காங்கயம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் காடேஸ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: காங்கயம் வட்டார பகுதி உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக உணவுப் பொருள் வணிகம் செய்வோருக்கு உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற சிறப்பு முகாம் இன்று (22ம் தேதி) காங்கயம்-திருப்பூர் சாலையில் உள்ள காயத்ரி மஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். எனவே காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மளிகை கடைகள், டீ கடைகள், உணவகம், பேக்கரி, காய்கறி கடைகள், எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் மட்டன், சிக்கன் கடை நடத்துபவர்கள் உரிமம் எடுக்காவிட்டால் இந்த முகாமில் கலந்து கொண்டு உரிமம் பதிவு பெற்றுக்கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.