செய்முறை :ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடு பண்ணவும். இத்துடன் கால் டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் நெய் ஊற்றிக் கலந்து அடுப்பில் இருந்து இறக்கி, கவுனி அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, மாவு கொழுக்கட்டை பதத்துக்கு வந்ததும், தண்ணீர் ஊற்றுவதை நிறுத்திவிடவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வெல்லம், தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து பூரணமாக கிளறி வைக்கவும். இனி பிசைந்த கொழுக்கட்டை மாவை கொழுக்கட்டை அச்சில் வைத்து உள்ள வெல்ல பூரணத்தை நிரப்பி மூடி எடுக்கவும். கொழுக்கட்டை வடிவம் வந்ததும் ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் கொழுக்கட்டை தயார்.
கவுனிக் கொழுக்கட்டை
78
previous post